படிக்கக் கூடாத புத்தகம்
(வெற்றியடைய விரும்பாதவர்கள் மட்டும்)
ஆரோக்கியம் – ஆனந்தம் – ஐஸ்வர்யம் நிறைந்த வாழ்க்கையை வாழ உதவும் ஒரு நடைமுறை வழிகாட்டி…

இந்த புத்தகம் யாருக்காக?
வாழ்க்கையில் முன்னேற வேண்டும்… ஆனால் எங்கே தொடங்குவது என்று தெரியவில்லையா?
இது உங்களுக்கான புத்தகம்…

திரு. தரணீதரன்.GD அவர்கள்
நிறுவனர் – Social Eagle Private Ltd

அப்படி என்னதான் இருக்கிறது இந்த புத்தகத்தில்…
இந்த நூல்,
வெற்றியை வெறும் பணமாக மட்டும் பார்க்காமல்
ஆரோக்கியம் – ஆனந்தம் – ஐஸ்வர்யம்
இந்த மூன்றின் சமநிலையாக பார்க்கிறது.
இந்த புத்தகத்தில் நீங்கள் காணப்போவது:
உங்கள் உடலை ஒரு ரகசிய கோவிலாக பார்க்கும் புதிய பார்வை!
கோபம், சோர்வு, தள்ளிப்போடும் பழக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடும் வழிகள்!
நேரம், வளம், சமூக உறவுகள் ஆகியவற்றை சரியாக கையாளும் வாழ்க்கைத் திறன்கள்!
“வாழ்க்கை என்றாவது ஒருநாள் நன்றாக இருக்கும்” என்ற நம்பிக்கையை மாற்றி, “இந்த கணமே நன்றாக வாழலாம்” என்னும் நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
இந்த புத்தகம், உங்களுக்கு போதிக்காது, பயமுறுத்தாது, மாயை காட்டாது.
ஆனால், உங்களை சிந்திக்க வைக்கும், உங்களை உணர வைக்கும், உங்களை மெதுவாக மாற்றும்.
ஆரோக்கியம் – ஆனந்தம் – ஐஸ்வர்யம் மூன்றும் ஒன்றாக இணைந்த வாழ்க்கை வேண்டும் என்றால்…
இன்றே இந்தப் புத்தகத்தை படிக்கத் தொடங்குங்கள்!ஏனெனில், இது உங்களுக்காகவே எழுதப்பட்டது.
புத்தகத்தைப் பற்றி வாசகர்களின் வரிகள்…





ஆசிரியரைப் பற்றி சில வரிகள்…
இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஹரி மணிகண்டன், கணிப்பொறி இளநிலை பட்டம் பெற்று,
பெருநிறுவனங்களில் மேலாண்மை பொறுப்பு வகிப்பவர். சிறுவயதிலிருந்தே, புத்தக வாசிப்பின் மீது கொண்ட பேரார்வத்தின் விளைவாக, எழுதத் தொடங்கியவர்.
எப்படியும் வாழலாம் என்ற வாழ்க்கையை கடந்துவந்து, இப்படித்தான் வாழவேண்டும் என்று முறைப்படுத்திக் கொண்டதன் பயனாக, “யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்” என்னும் கூற்றுக்கிணங்க,
படிக்கக் கூடாத புத்தகம்
(வெற்றியடைய விரும்பாதவர்கள் மட்டும்) என்னும் நூலை உங்களுக்காக கொடுத்துள்ளார்.
எவர் ஒருவர் இந்தப் புத்தகத்தை படித்து, தங்கள் சிந்தனையில் தெளிவையும், வாழ்வில் மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு, ஆரோக்கியம் – ஆனந்தம் – ஐஸ்வர்யம் நிறைந்த ஒரு வாழ்க்கை அமைவது உறுதி.
